உனக்கென்ன வேணும் சொல்லு Unakkenna Venum Sollu Lyrics

Song: Unakkenna Venum Sollu

Singers: Benny Dayal, Mahathi
Composer: Harris Jayaraj
Lyrics: Thamarai
Movie: Yennai Arindhaal

Yennai Arindhaal Movie Photo Ajith and Trisha 2

 

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம்
தேடி போவோமே

பிடித்ததை வாங்க சொல்லு
வெறுப்பதை நீங்க சொல்லு
புது வெள்ளம் புது ஆறு
நீந்தி பார்ப்போமே..

 

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது
பார்க்க போறோமே

உலகேனும் பரமபததம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைதது நினையாதது
சேர்க்க போறமே

 

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல
அந்த வானம் மினுங்கும் மேல

 

கனவுகள் தேய்ந்ததென்று
கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து
தூங்க சொல்லியதே
எனகென உன்னை தந்து
உனக்கு இரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காணசெல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மதி மேதை மேல் மடங்கிக்கொள்கின்றேன்

 தான தானானஆதார நாம்தாம்
தான தானானஆதார நாம்தாம்
தான தானானஆதார நாம்தாம்
தான தானானஆதார நாம்தாம்

 

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம்
தேடி போவோமே

 

பிடித்ததை வாங்க சொல்லு
வெறுப்பதை நீங்க சொல்லு
புது வெள்ளம் புது ஆறு
நீந்தி பார்ப்போமே..

 

பருவங்கள் மாறி வர
வருடங்கள்  ஓடி விட
இழந்த என் இனிமைகளை
உன்னில் கண்டேனே
எழுததீடும் உன் விரலில்
சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை
கண்டுகொண்டேனே..
துருவங்கள் போல் நீளும்
இடைவெளி அன்று.. ஓ..
தோள்களில் உன் மூச்சு
இழைகிறதென்று

 

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம்
தேடி போவோமே

 

பிடித்ததை வாங்க சொல்லு
வெறுப்பதை நீங்க சொல்லு
புது வெள்ளம் புது ஆறு
நீந்தி பார்ப்போமே..

 

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது
பார்க்க போறோமே

 

ஒரு வெள்ளி கொலுசு போல
இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல
அந்த வானம் மினுங்கும் மேல

 


Posted

in

by

Tags: