துளி துளி துளி மழையாய் வந்தாளே…

 

வரிகள்:- ந.முத்துக்குமார்
திரை படம் :- பையா

 

 

துளி துளி துளி மழையாய் வந்தாளே…  
துளி துளி துளி மழையாய் வந்தாளே…
சுட சுட சுட மறைந்தே போனாளே…
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்….
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா…
அழகாய் மனதை பறித்து விட்டாளே…….
துளி துளி துளி மழையாய் வந்தாளே…
சுட சுட சுட மறைந்தே போனாளே…

 

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,
பார்வை ஆளை தூக்கும்…
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்…
பாதம் ரெண்டும் பார்க்கும்போது
கொலுசாய் மாறதோன்றும்…
அழகாய் மனதை பறித்து விட்டாளே….
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல் எ
ன்றே நெஞ்சம் கொல்லுதடா…

 

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே
ஏங்குவேன் தோள்களில்
உயிரை ஏதோ செய்தாள்…
மௌனமாக உள்ளுக்குள்ளே
பேசும்போதும் அங்கே வந்து
ஒட்டு கேட்டாள்…
கனவில் கூச்சல் போட்டாள்…
அழகாய் மனதை பறித்து விட்டாளே…
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

 

துளி துளி துளி மழையாய் வந்தாளே…
சுட சுட சுட மறைந்தே போனாளே…
துளி துளி துளி மழையாய் வந்தாளே…
சுட சுட சுட மறைந்தே போனாளே…

 Posted

in

by

Tags: