பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

வரிகள்:- ந.முத்துக்குமார்
திரை படம் :- மதராசபட்டினம்
இசை :- G. V. பிரகாஷ்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்துப்போவதில்லை
நேற்றுவரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே …
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ ..
இரவும் விடியவில்லையே , அது முடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே …

வார்த்தை தேவையில்லை வாழும் காலம்வரை
பாவை வாழ்வின் ஒளிப்பெசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதியின்றி வின் தூவும் மழியின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே

வாழ் இன்றி மான் இன்றி
வருகின்ற யூத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் ஏதேதோ மின்னுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சிக்குள்ளும் இருக்கும்
இதையறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்லவேண்டும் எனக்கும்
பூந்தளிரே …

எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத்தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீ என்பேன்
யார் என்று அறிய ஆமல்
பெறக்கூட தெரியாமல் இவனோடு
ஒரு சொந்தம் உருவானதென்

ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இல்லை தோடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ …

தான தொ தனன , தான தொ தனன
தான தொ தனன தானானே நன்னா
தான தொ தனன , தான தொ தனன
தான தொ தனன தானானே நன்னா


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *