பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

வரிகள்:- வாலி
திரை படம் :- நான் கடவுள்

 

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா…
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா…
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இன்மையை நான் அறியாததால்…
இன்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட….
பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே…..
பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே…..

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்…
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா… இருமுறையா…
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா.. பழவினையா…
கனம் கனம் தினம் எனைக் குடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே…
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே…
அருள் விழியால் நோக்குவாய்…
மலர் பதத்தால் தாங்குவாய்…
உன் திருக்கரம் எனை அரவனைத்து உனதருள் பெற
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்
அய்யனே என் அய்யனே….



Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *