ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

திரைப்படம்: என் சுவாசக் காற்றே 
வரிகள்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்: எம்.ஜி. ஸ்ரீரிகுமார்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் 

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுதுஒரு துளி… இரு துளி…
சிறு துளி… பல துளி…

 

சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ

 

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ(சின்னச் சின்ன மழைத்துளிகள் )

சிறு பூவினிலே விழுந்தால்
ஒரு தேன்துளியாய் வருவாய்…
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்…
பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்…
என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய ஷவரிது…
அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது…இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியதுசக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (சின்ன சின்ன)
மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )

 


Posted

in

by

Tags: