காதல் வந்தும் சொல்லாமல்

வரிகள்: கபிலன் 
திரைப்படம்: சரவணா
பாடியவர்கள் : சைந்தவி, ப்ரசன்னா
இசை: ஸ்ரீகாந்த் தேவா

 

காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை
கொல்லாதே சொல்லாமல் செல்லாதே…

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பல துளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு

விதியின் கைகளோ வானம் போன்றது
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது

நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா?
காதல் கதறி இங்கு அழுகிறதே
இரண்டு கண்ணும் அதில் கருகாதா

ஏன்தான் காதல் வளர்த்தேன்
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்
பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன்…ஒ..ஒ
இரவைத் தின்று வாழ்ந்தாய் நீயடி…ஒ ஒ…
இதயம் கொண்டு போனாய் என்னடி

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை,
கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே

ஓகாதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பல துளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு

விதியின் கைகளோ வானம் போன்றது
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *