இது வரை இல்லாத உணர்விது

வரிகள்:- கங்கை அமரன்
திரை படம் :- கோவா
இசை:- யுவன் ஷங்கர் ராஜா

 

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும் பாடல் கேட்டாயோ
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும் பாடல் கேட்டாயோ

 

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே …..

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே …..

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும்
நாள் செல்லுதே….

இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வரவேண்டும்
நீண்ட வழி என் பயணம் ohho

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்

என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

பெண்: இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மனநிலை தான் Ohhh ohh
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

தேகம் இப்போது உணர்ந்தது…
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *