Category: News
-
இலங்கை பாராளுமன்றம் நாளை நள்ளிரவு கலைப்பு? ஜனாதிபதி அறிவிக்கிறார்?
இலங்கை பாராளுமன்றத்தை நாளை நள்ளிரவில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே கலைக்கக் கூடும் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை கோத்தபாய நியமித்தார். இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தின் பதவிக் காலம் மார்ச் 1-ந் தேதியுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்க பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் அல்லது…