YouTube Video – க்களை Audio ஆக மாற்றம் செய்வது எப்படி?

YouTube வீடியோக்களை நம் வலைப்பூக்களில் Embed செய்யும் போது சில சமயம் வெறும் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படுவதாக இருக்கும். அம்மாதிரியான சமயங்களில் இடத்தை அடைத்துக் கொள்ளும் வகையில் இல்லாமல் வெறும் ஆடியோ மட்டும் வரும் வண்ணம் எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

நீங்கள் Embed செய்யும் வீடியோ கீழே உள்ளது போல வரும்.

இதை செய்ய முதலில் கீழே உள்ள Coding-ஐ Copy செய்து உங்கள் Post Edit பகுதியில் HTML பகுதியில் Paste செய்து கொள்ளுங்கள்.

<div style=”position:relative;width:267px;height:25px;overflow:hidden;”>
<div style=”position:absolute;top:-276px;left:-5px”>
<iframe width=”300″ height=”300″
src=”https://www.youtube.com/embed/youtubeID?rel=0″>
</iframe>
</div>
</div>

இப்போது எந்த வீடியோவை, ஆடியோ ஆக Embed செய்ய வேண்டுமோ அதன் வீடியோ ஐடியை காபி செய்ய வேண்டும். அது வீடியோவின் URL பகுதியில் இருக்கும்.

youtube-videoஇது சில சமயம் வேறு மாதிரி வர வாய்ப்பு உள்ளது. அப்போது v= என்பதற்கு அடுத்து உள்ள சில வார்த்தைகளை மட்டும் Copy செய்து கொள்ளுங்கள். கீழே உள்ளது ஒரு உதாரணம்.

இதை நீங்கள் ஏற்கனவே Paste செய்த Coding – இல் youtubeID என்பதற்கு பதில் Copy செய்த Video ID – ஐ பேஸ்ட் செய்ய வேண்டும். இப்போது கோடிங் கீழே உள்ளது போல இருக்கும்.

அவ்வளவுதான் இனி வீடியோவின் ஆடியோ மட்டும் உங்கள் தளத்தில் வரும்.


by

Tags: