வெற்றிக்கு விடாமல் போராடு

  • நம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி நிச்சயம். நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும்.
  • ஒரு முயற்சியை மேற்கொண்டால் வெற்றி ஏற்படும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
  • ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்கும் எதற்கும் பயம் கொள்ளாதீர்கள். இந்த விரதத்தைக் கடைபிடித்தால் வாழ்வில் எப்போதும் துன்பம் இல்லை.
  • ஆண்களுக்கு ஈடான கல்வி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அப்போது சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும்.
  • பகுத்தறியும் சக்தி இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இது தான் கொள்கை என்று வாழ்பவனிடமே பகுத்துணரும் சக்தி இருக்கும்.
  • எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட்டு இன்பம் அடையும் வழியை பகவத்கீதை நமக்கு போதிக்கிறது.
  • ஒருவனிடம் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் அவனிடத்தில் அக்னிக்கு நிகரான சக்தி உண்டாகிவிடும்.

– பாரதியார்


Posted

in

by

Tags: