இன்று முதல் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் வழங்க்கப்பட்டு வருகின்றன. கடிதங்கள் கிடைக்க பெறாதவர்கள் வீணாக குளபம்மடைய வேண்டாம் என்று ஒன்றினைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கேட்டுள்ளது ஏன் என்னில் எதிர்வரும் 6ம் திகதி வரை கடிதங்கள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதுவரை HNDA, உள்வாரி பட்டதாரிகள், வெளிவாரி பட்டதாரிகள் தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக Facebook ல் பதிவிடடுள்ளனர்.
நியமனக்கடிதத்திலுள்ள முக்கிய விடயங்கள்.
1. நியமனம் ஏற்க வேண்டிய பிரதேச செயலகம்
2.நீங்கள் பதிவு செய்த தினத்தில் இருந்து தான் உங்கள் பயிற்சி காலம் ஆரம்பிக்கும்
3.நீங்கள் பிரதேச செயலகத்தில் இணைந்த மூன்று நாட்களுக்குள் நியமனம் ஏற்றமை தொடர்பில் உரிய பிரதேச செயலாளர் மூலமாக எமக்கு கடிதம் மூலம் அறிவிக்க வேண்டும்
4.பிரதேச செயலகத்தில் இக் கடிதத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் விபரம்.
5.வெற்றிகரமான ஒரு வருடப் பயிற்சியின் பின்னர் நீங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்த துறையில் உங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.