Colombo (News 1st) வேலையில்லாத பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுநர்களாக இணைப்பதற்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படவுள்ளன.
இதற்காக இன்றைய தினம் விசேட தபால் விநியோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினத்திற்குள் குறித்த நியமனக் கடிதங்கள் அனுப்பப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியரச்சி தெரிவித்துள்ளார்.
அரச சேவை பயிலுநர்களாக 40,000 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்களில், 80 வீதமானோர் பாடசாலைகளில் பயிலுநர் ஆசிரியர்களாக இணைக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒரு வருட பயிற்சியின் பின்னர் அவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.