ரெட்டினா தொழில் நுட்பத்தில் புதிய சாம்சங் ரப்லெட்

சாம்சங் நிறுவனம் புதிதாக 11.8 இஞ்ச் டேப்லட்டினை உருவாக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தொழில் நுட்ப உலகில் இரு பெரும் துருவங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையே காப்புரிமை பற்றிய நிறைய வாக்கு வாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இருப்பினும் இந்த இரண்டு நிறுவனங்களும் சிறந்த சாதனங்களை வழங்க தவறுவதில்லை. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக, கேலக்ஸி நோட்-2 என்ற ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இது அல்லாமல் 11.8 இஞ்ச் டேப்லட்டினை உருவாக்கும் மும்முறத்தில் இருக்கிறது சாம்சங், என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த 11.8 இஞ்ச் டேப்லட்டில் 2560 X 1600 திரை துல்லியத்தினை பெறலாம். இதன் திரை ரெட்டினா தொழில் நுட்ப வசதியினையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரையின் மூலம் டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும் சாம்சங் வழங்கும் புதிய டேப்லட். இந்த புதிய டேப்லட்டிற்கு பி-10 என்று கோட் நோம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனமும் ஐபேட் மினி என்ற டேப்லட்டை வருகிற செப்டம்பர் மாதம் 12 தேதி அறிமுகம் செய்யும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை சாம்சங் நிறுவனம் 7 இஞ்ச், 8.9 இஞ்ச், 10.1 இஞ்ச் என்று திரைகளில் பல வித்தியாசத்தினை காட்டி இருக்கிறது. 5.5 இஞ்ச் கொண்ட ஃபேப்லட்டினையும் உருவாக்கி வருகிறது. புதிய தொழில் நுட்பம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களை சாம்சங் நிறுவனம் உருவாக்கி கொடுக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


by

Tags: