ஒய்வின்றி உழைத்தால் உடல் – மனநலம் பாதிக்கும்

50 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால், உடல்நலம், மனநலம் ஆகியவை பாதிக்கப்படும்’ என, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக, இந்த ஆய்வை மேற்கொண்ட, கன்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர், சாரா அசபெடோ கூறியதாவது:

நம் உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் வேலை செய்வதற்கும், நம் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில், வேலையே கதி என, ஓய்வில்லாமல், உணவில்லாமல் உழைப்பவர்களுக்கு, பிரதிபலனாக, அவர்களது உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவை ஒருங்கே பாதிக்கப்படுகிறது. ஓய்வின்றி உழைப்பதால், மனத் தடுமாற்றம் ஏற்படுவதையும் காண முடிந்தது.

Brainதொடர்ந்து உழைத்தால், உடல்நிலை பாதிக்கும் என, நன்கு தெரிந்திருந்தும், பலர், அவர்களது வேலைக்கு அடிமைகளாகிவிட்டதற்கு முக்கியக்காரணம், அவர்களை மற்றவர்கள், “எந்த வேலைக்கும் லாயக்கில்லை’ என, முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயம்தான்.

அதுமட்டுமின்றி, ஓய்வில்லாமல் உழைப்பதால் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்றாலும், அதைச் செலவிடுவதற்குக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. அதுபோல், கூடுதலாக வருவாய் கிடைப்பதற்காக, அதிகநேரம் வேலை செய்வதால், அது சில கெட்ட பழக்கங்களையும் ஏற்படுத்திவிடுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Hot this week

பங்குச் சந்தை வீழ்ச்சிக்குப் பிறகு உண்மையில் என்ன நடக்கிறது?

பங்குச் சந்தை திடீரென வீழ்ச்சியடையும் போது, முதலீட்டாளர்களின் முதல் எதிர்வினை பெரும்பாலும்...

ஒவ்வொரு Swing Trader/Investor தெரிந்து கொள்ள வேண்டிய 6 Entry Types

Swing trading என்பது சரியான entry timing மீது மிகவும் சார்ந்த...

Stock Market Operators யார்? அவர்கள் எப்படி பங்கின் விலையை Manipulate செய்கிறார்கள்?

“Stock Market Operator” என்பதன் பொருள் பங்குச் சந்தையில் பெரிய அளவில்...

இலங்கை பங்குச் சந்தை லேசான உயர்வில் முடிவு; வங்கி பங்குகளில் விற்பனை அழுத்தம்

இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தை (CSE) திங்கட்கிழமை சிறிய உயர்வுடன் வர்த்தகத்தை...

ஆடைத் துறை வருவாய் மேலும் மந்தமடையும்

இலங்கையின் முக்கிய ஆடை உற்பத்தியாளர்களான Teejay Lanka PLC (TJL) மற்றும்...

Topics

லாபத்தை உறுதி செய்யும் “Sell Rules”

பங்கு சந்தையில் பலர் எப்போது வாங்குவது? என்று கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையான...

இலங்கை பங்குச் சந்தையில் முதலீடு எப்படி தொடங்குவது?

இன்றைய காலத்தில் செல்வத்தை (wealth) உருவாக்க மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் ஒன்று...

பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும்: இலங்கைக்கு IMF அறிவுரை

இலங்கை பொருளாதாரத்தின் மீளுருவாக்கப் பயணத்தில் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச...

Related Articles

Popular Categories