மனதில் நம்பிக்கை மலரட்டும்

 

  • பாவத்தைப் போக்கி விட்டால், மனிதனுக்கு தேவர்களைப் போல அமரவாழ்வு உண்டாகும்.
  • பழி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவனுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
  • எந்த விஷயத்தையும் ஆராய்ந்து அனுபவத்தில் பார்த்தால் மட்டுமே அது உண்மையா, பொய்யா என்பதை நம்மால் உணர முடியும்.
  • மனிதன் துன்பத்தில் இருந்து விடுபட்டு என்றும் மாறாத பேரின்பத்தை அடைய வேண்டும் என்பது தான் ஆன்மிகத்தின் நோக்கம்.
  • கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவை விஷத்தன்மை கொண்டவை. இவை மனதில் நுழைய ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
  • சொல்லிலும் நடையிலும் நேர்மை இருக்கட்டும். உள்ளத்திலும் உதட்டிலும் உண்மை தவழட்டும். சத்தியமே நம்மை வழிநடத்தட்டும்.
  • பயம், சந்தேகம், சோம்பல் போன்ற எதிரிகள் நம் மனதில் ஒளிந்து இருக்கிறார்கள். நம்பிக்கை மலர்ந்து விட்டால் அகப்பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.

– பாரதியார்


Posted

in

by

Tags: