மேலும் 13 மொழிகளில் ஜிமெயிலைப் பயன்படுத்தும் வசதி

gmail logo 01

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணியில் திகழும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையினை மேலும் 13 மொழிகளில் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது.

இவ்வசதியினை நேற்றைய தினம் கூகுள் அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு முதல் 58 மொழிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஜிமெயில் சேவையை இனி 71 மொழிகளில் பயன்படுத்த முடியும்.

இப்புதிய மொழி அறிமுகம் மூலம் தற்போது உலகெங்கிலும் உள்ள இணையப்பாவனையைப் பாவனையாளர்களில் 94 சதவீதமானவர்களை தன்னகத்தே அடக்கக்கூடியதாக இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக உள்ளடக்கப்பட்ட மொழிகள்

Afrikaans, Armenian, Azerbaijani (Azeri), Chinese (Hong Kong), French (Canada), Galician, Georgian, Khmer, Lao, Mongolian, Nepali, Sinhala, மற்றும் Zulu


by

Tags: