முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடையை கண்டுபிடிச்சாச்சு!


இந்த உலகில் காலம் காலமாக இருக்கும் பல கேள்விகளுக்கு நம்மால் விடை கண்டறிய முடியாது. அவை என்ன தான் ஒரு எளிமையான விஷயங்களாய் தெரிந்தாலும் கூட, அதற்கான உண்மையை நம்மால் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அது போன்ற ஒரு கேள்வி தான் முட்டை என்பது சைவமா அசைவமா என்ற ஒரு கேள்வி…!!

நமக்கு தெரிந்து முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இது பலவகையான மேற்கத்திய உணவுகளிலும் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிலர் முட்டையை அசைவம் என்று வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். அதே சமயம் சிலர் முட்டையை சைவம் தான் என்று உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்… உண்மையில் முட்டை என்பது சைவமா அல்லது அசைவமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைவரும் இருக்கும். இந்த பகுதியில் முட்டை சைவமா அல்லது அசைவமா என்பது பற்றி விரிவாக காணலாம்.

தெரியாத உண்மை

முட்டையை பற்றிய பல தெரியாத கருத்துக்கள் பரவி வருகின்றன. முட்டை சைவமா அல்லது அசைவமா என்ற ஒரு கேள்வி பலரிடையே உள்ளது. முட்டை ஒரு அசைவ உணவு என்று பலரும் கூறுகின்றனர். இந்த கருத்தை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனென்றால் அசைவு உணவு என்று சதை அல்லது உயிர் உள்ள உணவுகளை தான் கூறுகின்றனர். ஆனால் முட்டையில் எந்த ஒரு உயிரோ அல்லது சதைப்பகுதியோ இல்லாத காரணத்தால் இது சைவ உணவு தான் என்ற ஒரு கருத்து உள்ளது.

முட்டை சைவமா அசைவமா egg-vegetarian-or-non-vegetarian

கோழியில் இருந்து தானே வருகிறது?

கோழியில் இருந்து தான் முட்டை வருகிறது. ஆனால் இது கோழியை கொன்று வருவதில்லை. மிருகங்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து பொருட்களுமே அசைவ உணவு கிடையாது. உதாரணமாக பால் என்பது பசுவிடம் இருந்து தான் பெறப்படுகிறது. அதற்காக பாலை நாம் அசைவம் என்று சொல்வது கிடையாது.

முட்டையின் வெள்ளை கரு

முட்டையின் வெள்ளை கருவில் புரோட்டின் நிறைந்துள்ளது. ஆனால் இதில் விலங்கு செல்கள் என்பது சிறிதளவு கூட கிடையாது. இதனால் தான் முட்டையின் வெள்ளைக்கரு ஒரு சைவ உணவாகும். மேலும் முட்டையின் வெள்ளைக்கருவை கொண்டு சமைக்கப்படும் அனைத்து உணவுகளுமே அறிவியல் ரீதியாக சைவ உணவுகள் தான்.

முட்டை சைவமா அசைவமா egg-vegetarian-or-non-vegetarian

மஞ்சள் கருவும் தான்.. ஆனால்?

மஞ்சள் கருவின் பெரும்பகுதி கொழுப்பு, கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவற்றின் கலவை ஆகும், ஆனால் கியூம செல்களை முழுமையாக மஞ்சள் கருவில் இருந்து பிரித்தெடுக்க முடியாது என்பதால் மஞ்சள் கரு ஒரு அசைவம் ஆகும்.

கோழிக்குஞ்சு?

சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலன முட்டைகள் குஞ்சு பொரிக்காத தன்மை உடையவை. எனவே இதில் இருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவருவதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது.

ஆரோக்கியம் முட்டை சைவமோ அசைவமோ ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மிக மிக சிறந்தது என்பதில் எந்த விதமான குழப்பமும் வேண்டாம். தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை காணலாம்.

via boldsky


Leave a Reply

Your email address will not be published.