புதிய ஐபேட் மினி! அறிமுகம் செய்யும் ஆப்பிள்!

வருகிற அக்டோபர் மாதம் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினி டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது. சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் நெக்சஸ்-7 என்ற தனது புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்தது.

கூகுளின் டேப்லட்டிற்கு எது போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இனி கூகுளின் நெக்சஸ்-7 டேப்லட்டிற்கு, ஆப்பிளின் இந்த ஐபேட் மினி போட்டியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமேசானின் கின்டில் ஃபையர், கூகுளின் நெக்சஸ்-7 என்று டேப்லட் உலகில் போட்டி அதிகமாகி கொண்டே போகிறது. ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ஐபோன்-5 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் தருணத்தில், இந்நிறுவனம் புதிய ஐபேட் மினி டேப்லட்டினை வருகிற அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யும் என்று செய்தி புதிதாக தான் இருக்கிறது.

ஆப்பிளின் இந்த ஐபேட் மினி டேப்லட், 7.85 இஞ்ச் திரையினையும், 8 ஜிபி மெமரி வசதியினையும் கொண்டதாக இருக்கும். இந்த ஐபேட் மினி வெளியிடப்படும் முதல் காலாண்டுலேயே 1 கோடி மினி ஐபேட் டேப்லட்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என்று, 9.7 இஞ்ச் கொண்ட நியூ ஐபேட்டினை விட இந்த ஐபேட் மினி 25% சதவிகிதம் அதிகம விற்பனையை கொண்டிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எந்த தொழில் நுட்பமாக இருப்பினும் கிட்டதட்ட அதன் விலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழும். அந்த வகையில் அக்டோபர் மாதம் அறிமுகமாக இருக்கும் இந்த ஐபேட் மினி டேப்லட், ரூ. 16,635 விலை கொண்டதாக இருக்கும். அப்படி என்றால் ஐபேட் மினி-க்கும் பிறகு தான், ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போல் தெரிகிறது.


by

Tags: