Month: October 2012
-
பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்
பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும். தற்போது நிறைய மக்கள் பற்கள் வெள்ளையாக மாறுவதற்கு எவ்வளவோ முயற்சிகளை எடுக்கின்றனர். மேலும் பற்களை வெள்ளையாக்குவதற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் நிறைய இயற்கை வழிகள் இருக்கின்றன.…
-
உங்க குழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில ஆலோசனைகள்
இன்றைய காலத்தில் உடல் பருமன் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை, குழந்தைகளையும் தான். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய நோய்கள் எல்லாம் தாக்காமல் இருக்க, தேவையில்லாத கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டாம். ஆனால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது என்பது சற்று கடினமானது. ஏனெனில் அவர்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடாமல் வைப்பது என்பது மிகவும் கடினம். மேலும்…
-
பக்கவாத நோயிலிருந்து உங்களை பாதுகாக்க தக்காளி சாப்பிடுங்கள்
பக்கவாத நோயில் இருந்து உங்களை நீங்களே பாதுகாக்க தக்காளி சாப்பிடுங்கள். பக்கவாத நோயை குணப்படுத்தும் திறன் தக்காளி பழ்த்துக்கு உள்ளது என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள் பக்கவாத நோயை தடுக்கும் தன்மை உடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பக்கவாத நோய் குறித்து பின்லாந்தில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் குழு 1031 ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். பரிசோதனையின் தொடக்கத்தில் இவர்களின் ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின்…
-
4 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
நான்கு சூரியன்களால் ஒளி பெறும் புதிய கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையத்தளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். எனவே இந்த கிரகத்திற்கு பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு…