ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை பெறுவதற்கு

உலகின் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின் வடிவமைப்பில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது கூகுள் நிறுவனம். 

இது தொடர்பான அறிவித்தலை தனது உத்தியோபூர்வ வலைப்பதிவில் நேற்று அறிவித்திருந்தது அந்நிறுவனம்.

இப்புதிய மாற்றத்தை செயற்படுத்த ஜிமெயிலின் கீழ் வலது பக்க மூலையில் தெரியும் “Switch to the new look” என்பதை அழுத்தவதன் மூலம் செயற்படுத்த முடியும்.

இவ்வாறு செயற்படுத்திய பின்னர் கூகுள் பிளஸ் போன்றே ஜிமெயிலும் காட்சி தரும். சர்ச் பட்டன், லேபல் காண்டெக்ஸ், போன்றவற்றில்  மாற்றங்களை செய்தும், HD Themes போன்ற புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.


by

Tags: